நாட்காட்டியின் புத்தாண்டு வாழ்த்து
நாட்கள் தவறாமல்நாட்காட்டியை கிழித்து
புத்தாண்டிற்கு விழாயெடுக்கும்
இளைஞர்களை கேட்கிறேன்..!!!!
எனை கிழித்ததை தவிர
ஓராண்டில் - நீங்கள்
முடித்த கடமைகலென்ன..?
உயிரில்லை என்றாலும் - நான்
உற்று நோக்குகிறேன்
உணர்வில்லா இளைய சமூகத்தை..!!
கடமையை முடிக்காமல்
நானுறங்கியதில்லை
உறங்கியதை தவிர
நீங்கள் செய்ததென்ன ..?
கிழித்ததென்னவோ காகிதம்
கிழிந்ததென்னவோ நானில்லை
உன் வாழ்க்கையிலோர் பக்கம்..!!!
வீசியதென்னவோ குப்பையில்
வீழ்ந்ததென்னவோ நானில்லை
உன் எதிர்காலம் லட்சியம்..!!!
வலைத்தள நண்பர்களுடன்
அரட்டை அடிப்பதே கடமை
அறிவை வளர்ப்பதல்ல..!!!
காதலை தேடுவதே கடமை
கல்வியில் சிறந்து
நாட்டை வளர்ப்பதல்ல..!!!
முகத்தின் அழகை காப்பது
கடமை
அழியும் இனத்தை காப்பதல்ல..!!!
ஆனந்தமாக மதுவருந்தி
நாட்களை கடத்துவீர்
நாட்டின் நிலையறியாமல்..!!!
உன் மொழி
உன் நாடு
உன் சமூகம்
இவையாவும் உன்னை நம்பி..!!!
இளைஞனே சிந்தித்து
கடமைகளை முடி
இந்தியாவை முதன்மையாக்க..!!!
அறிவுரை பிடிக்காது
இளைய சமூதாயத்திற்கு
ஆதலால் முடிக்கிறேன் உரையை
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களுடன்.!!!
என்றும் தோழமையுடன் ------S. சூரியன்..... மாவட்டசெயலர்