Tuesday, 31 March 2015

காட்டூன் . . . கார்னர் . . .


20.05.2009 முதல் ஒப்பந்த ஊழியர்களுக்கு நிலுவை தொகை...

அருமைத் தோழர்களே! நமது BSNL அலுவலகங்கள் மற்றும் தொலை பேசியகங்களில்  Sweeping and Cleaning- பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு 20.05.2009 முதல் தொழிலாளர் ஆணையர் உத்தரவின் படி  கூடுதல் சம்பளம் வழங்க வேண்டுமென நமது BSNLEU & TNTCWU ஆகிய இருசங்கங் களும்  வழக்கு எண் WA - 770/2013படி  தொடுத் திருந்த வழகிற்க்கு நல்ல தீர்ப்பு கிடைத்துள்ள படியால் 20.05.2009 முதல் நிலுவை கிடைக்கும். 

Monday, 30 March 2015

தோழர் ஜோதிபாசு நூற்றாண்டு விழா நிறைவு கொல்கத்தாவில் சர்வதேச ஓவியக் கண்காட்சி.

இந்திய உழைக்கும் மக்களின் உன்னதத் தலைவர் ஜோதிபாசுவின் நூற்றாண்டு விழா நிறைவையொட்டி சர்வதேச ஓவிய கண்காட்சி ஒன்று கொல்கத்தாவில் துவங்கியுள்ளது.ஜோதிபாசு நூற்றாண்டு விழாக்கமிட்டியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஓவியக் கண்காட்சியானது கடந்த 24ம்தேதியன்று தொடங்கப்பட்டது. கண்காட்சி 30ம்தேதி நிறைவு பெறுகிறது.புகழ்பெற்ற வசிம் கபூர் கொல்கத்தாவிலுள்ள அருங்காட்சியகத்தில் இக்கண்காட்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். இதில் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளிலிருந்து 500 ஓவியர்கள் தங்களது சிலைகளையும் படைப்புகளையும் ஜோதிபாசுவிற்கு மாரியாதை செலுத்தும் முகமாக அனுப்பியுள்ளனர். 12 நாடுகளில் இருந்து இக்கண்காட்சியில் படைப்புகள் இடம் பெற்றுள்ளன.முன்னதாக கண்காட்சியை முன்னாள் மக்களவை சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி தொடங்கிவைத்தார்.மேற்குவங்க சட்டப்பேரவையின் முன்னாள் சபாநாயகர் ஹாசிம் அப்துல் ஹலிம் தலைமை தாங்கினார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான டாக்டர் சூர்யகாந்த மிஸ்ரா பேசும்போது, ஜோதிபாசுவின் பாரம்பரியத்தை தொடர்ந்து கொண்டு செல்வது நமது பொறுப்பாகும் என்று குறிப்பிட்டார். நிகழ்ச்சியில் ஜோதிபாசுவின் அரிய புகைப்படங்கள் வெளியிடப்பட்டன. அனைத்து துறைகளையும் அனைத்து தரப்புகளையும் சேர்ந்த மக்கள் பங்கேற்றனர். பெருவாரியாக திரண்டு வந்திருந்த மக்கள் தங்களது அன்புக்குரிய தலைவருக்கு அஞ்சலியை செலுத்தினர்...நாமும் இணைவோம்.

29.03.15 ஆண்டிபட்டியில் நடைபெற்ற கையெழுத்து இயக்கம்.

அருமைத் தோழர்களே ! 29.03.15 அன்று மாலை 3 மணிக்கு ஆண்டிபட்டி பேருந்து நிலையத்தில் துவங்கி, நகர் முழுவதும்  இரவு 7 மணி வரை ஆண்டிபட்டி SDE தோழர். தங்கமணி அவர்கள் தலைமையில்  கையெழுத்து  இயக்கம் மிகவும் சிறப்பாக  நடைபெற்றது . . . 
ஆண்டிபட்டியில் கையெழுத்து இயக்க ஏற்பாட்டை தோழர்கள் மிக சிறப்பாக செய்து இருந்தனர். முன் கூட்டியே காவல் துறை அனுமதி, ஆட்டோவில் மைக் வைத்து ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களிடம் BSNL  ஊழியர்களும், அதிகாரிகளும் இந்திய நாடு முழுவதும் தேச பக்த இயக்கமாக நடத்துகின்ற "SAVE BSNL" கையெழுத்து இயக்கத்தை நடத்துகின்ற ஒரு பகுதியாகவே ஆண்டிபட்டியிலும் நடந்தது.
ஆண்டிபட்டியில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை  மதுரை தொலை தொடர்பு மாவட்ட  FORUM கண்வீனரும், BSNLEU மாவட்ட செயலருமான தோழர் எஸ். சூரியன் துவக்கிவைத்து கையெழுத்து இயக்கத்தின் அவசியம் மற்றும் நோக்கம் குறித்து விரிவாக உரை நிகழ்த்தினார்.
நிகழ்ச்சியின் போது முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் திரு. ஆசையன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். BSNLEU மாவட்ட சங்க துணைத் தலைவர் தோழர்.T.K. சீனிவாசன், எஸ்.ராஜன் , என். முத்துரத்தினம் ஆகியோர் கோரிக்கையை விளக்கி பேசினர். இறுதியாக BSNLEU மாநில சங்க துணைத் தலைவர் தோழர்.எஸ். ஜான் போர்ஜியா நிகழ்ச்சிக்கு நிறைவுரை நிகழ்த்தினார்.

தேனி மாவட்ட குறிப்பாக ஆண்டிபட்டித் தோழர்களுக்கு மாவட்ட சங்கம் மனப் பூர்வமான வாழ்த்துக்களை, பாராட்டுக்களை உரித்தாக்குகிறது....
--- என்றும் தோழமையுடன், எஸ். சூரியன் ---D/S-BSNLEU.

Sunday, 29 March 2015

31.03.2015 ஒருங்கிணைந்த பணி நிறைவு பாராட்டு விழா...

மார்ச் -2015 பணி  நிறைவு  செய்யும் தோழர்கள்...
1.   A. அருணாசலம், DGM (F&A) 
2.  C.  பாலுசாமி, TM/DDG 
3.   R. பானுமதி, SA/TKM 
4.   பாத்திமா பிபீ காஜாமைதீன் , SS/CSC 
5.   K. மகாலிங்கம், TM/TKM 
6.   T. முனுசாமி , TM/DDG
7.   K. மாரிமுத்து , RM/GM(O)
8.   G. பிரேமா,STS/TKM
9.  V. ராஜாராம் ,TM/CBM
10. G. ராமராஜ் ,TM/PKM
11. T.ராணி நிர்மலா தேவி ,SSS/GM(O)
12. K. ரெங்கசுப்ரமணியன் ,TM/DDG
13. R. ஸ்ரீதர் SDE/ELLIS
14. M. சுப்பிரமணியம் , TM/UTM      
15. N.S. ராஜா   TM/ODM (VRS)  அனைவரின் பணி ஓய்வு காலம், எல்லாவளங்களும் பெற்று சிறக்க நமது BSNLEU மாவட்ட சங்கம் உளமார வாழ்த்துகிறது.
---என்றும் தோழமையுடன், எஸ். சூரியன் ...D/S-BSNLEU.

28.03.15 சிறப்பாக நடைபெற்ற CSC/TKM கிளை மாநாடு...

அருமைத் தோழர்களே! 28.03.15 அன்று மாலை CSC/TKM  மனமகிழ் மன்றத்தில் நமது BSNLEU- CSC/TKM கிளை மாநாடு மிகவும் சீரும் சிறப்பாக தோழர். A.பாண்டியன் தலைமையில் நடைபெற்றது  ...
மாநாட்டில் அஞ்சலி உரையை தோழியர். R.மஞ்சுளா நிகழ்த்தினார், ஆண்டறிக்கையை கிளைச் செயலர் தோழர்.எஸ். சாத்தாவு சமர்பித்தார், வரவு-செலவு கணக்கை தோழர் எஸ். சங்கர் சமர்ப்பித்தார், ஆண்டறிக்கை மற்றும் வரவு-செலவு ஏற்பிற்கு பின் அமைப்பு நிலை விவாதத்தை தோழர் சி. காமாட்சி சுந்தரம் துவக்கிவைத்தார்.
தோழியர்.என்.ஈஸ்வரி, தோழர்.ஆர்.ரவிச்சந்திரன் ஆகியோரின் வாழத்துரைக்குப் பின் தோழர்கள் பி. சந்திர சேகர்,COS சி. செல்வின் சத்தியராஜ்,ACS எஸ். சூரியன்,D.S ஆகியோர் நமது BSNL நிறுவனம் இன்றைய நிலை குறித்தும், மத்திய அரசின் மக்கள் விரோத, ஊழியர் விரோத நிலைபாடுகள் குறித்தும்  ஆகவே, நமது FORUM அறிவித்துள்ள ஏப்ரல் 21 & 22 இரு நாட்கள் நடைபெற உள்ள வேலை நிறுத்தத்தில் அனைவரும் முழுமையாக கலந்துகொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளோடு சிறப்புரை நிகழ்த்தினர்.
மாநாட்டில் 15 பேர் கொண்ட கீழ்கண்ட  நிர்வாகிகள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப் பட்டனர். தோழர்.எஸ். சங்கர் நன்றியுரை கூற மாநாடு இனிதே நிறைவுற்றது.

28.03.15 தேனியில் நடந்த கையெழுத்து இயக்கம்...

நமது FORUM முடிவின் அடிப்படையில் தொடர் முயற்ச்சியாக தேனியில் 28.03.15 அன்று தேனியில் தோழர்கள்  கையெழுத்து இயக்கத்தில்  ஈடு பட்டனர் எதிர் பார்த்த அளவிற்கு அதிகமான கையெழுத்துக்கள் தேனியில் பெற முடியவில்லை என்றாலும், தொடர்ந்து 29.03.15 இன்று ஆண்டிபட்டியில் கையெழுத்து இயக்கத்தை பெறுவதற்கான திட்டமிடல் உள்ளது ...
தேனியில் நடைபெற்ற கையெழுத்து இயக்க காட்சிகள் 
 --- என்றும் தோழமையுடன், எஸ். சூரியன் ...D/S-BSNLEU.

பேட்மிண்டனில் உலகின் நம்பர் 1 வரலாறு படைத்தார் சாய்னா.

உலக பேட்மிண்டன் தரவரிசையில் மகளிர் பிரிவில் முதன் முறையாக முதலிடம் பிடித்து இந்திய நட்சத்திரம் சாய்னா நெவால் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.இந்திய வீராங்கனை ஒருவர் முதல் முறையாக தரவரிசையில் முதலிடம் பிடித்திருக்கும் வகையில் சாய்னா நெவால் சாதனை புரிந்துள்ளார்.புதுடெல்லியில் நடைபெறும் இந்தியன் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடரில் சனிக்கிழமையான இன்று ராட்சனாக் இண்டனான் என்பவர் கரோலினா மாரின் என்பவரை வீழ்த்தியதை அடுத்து சாய்னா நெவால் உலகின் நம்பர் 1 இடத்தைப் பிடித்தார்.இன்று ஜப்பான் வீராங்கனை யுயி ஹாஷிமோட்டோவுடன் சாய்னா நெவால் தனது 2-வது அரையிறுதியில் விளையாடுகிறார். ஆனால், இந்தப் போட்டிக்கு முன்பே உலகின் நம்பர் 1 இடத்தைப் பிடித்தார்சாய்னாநெவால்உலக பேட்மிண்டன் தரவரிசையில் பிரகாஷ் படுகோன் முதலிடம் பிடித்துள்ளார். ஆனால் மகளிர் பிரிவில் நம்பர் 1 இடத்தைப் பிடித்த இந்திய வீராங்கனை சாய்னா நெவால் மட்டுமேநம்பர் 1 இடம் குறித்து சாய்னா நெவால் கூறும்போது, “எல்லா போட்டித் தொடர்களிலும் பங்கேற்று அனைத்திலும் வெற்றி பெறுவதில் கவனம் செலுத்துகிறேன்என்னைத் தோற்கடித்த வீராங்கனைகளை வெற்றி பெற விரும்புகிறேன். கடந்த 3 ஆண்டுகளாக தோல்வி அடைந்தது போல் தோல்வியடைய விரும்பவில்லை. நான் சீராக வெற்றி பெற விரும்புகிறேன், வெற்றிகள் குவியும் போது தரவரிசை என்னும் சாதனையும் பின் தொடர்வது இயற்கைகடந்த 7 ஆண்டுகளாக முதல் 5 இடங்களில் என்னைத் தக்கவைப்பது மிகக் கடினமாக இருந்தது. நான் இதனை இன்னும் சில காலங்களுக்கு தக்கவைக்க நினைக்கிறேன். சிறந்த வீராங்கனையாக இருக்கவே விரும்புகிறேன். உலகின் முன்னணி வீராங்கனைகளை வீழ்த்த விரும்புகிறேன்இவ்வாறு தனது நம்பர் 1 சாதனை குறித்து சாய்னா நெவால் கூறியுள்ளார்.

பிரதமரிடம் தமிழக M.P.க்கள் முறையீடு . . .

மேக்கேதாட்டுவில் புதிய அணையைக் கட்ட கர்நாடக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கையில், மத்திய அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று தமிழக எம்.பி.க்கள் குழுவினர் பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் சனிக்கிழமை சந்தித்து முறை யிட்டனர்.  அவர்களின் கோரிக்கைகளை கனிவுடன் கேட்ட பிரதமர், "தமிழகத்தின் கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும்' என்று உறுதி அளித்தார்.காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு பகுதியில் புதிய அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டுள்ளது. இதற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.25 கோடியை கர்நாடக அரசு தனது நிதிநிலை அறிக்கையிலும் ஒதுக்கியுள்ளது. கர்நாடக அரசின் இந்த முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழக சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை முதல்வர் .பன்னீர் செல்வம் கொண்டு வந்த தீர்மானம் அனைத்துக் கட்சிகள் ஆதரவுடன் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.இந்தத் தீர்மானத்தின் நகலை தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் குழு பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து நேரில் வழங்குவர் என்றும் முதல்வர் பன்னீர் செல்வம் சட்டப்பேரவையில் தெரிவித்திருந்தார்.இதன்படி, மக்களவைத் துணைத் தலைவரும், கரூர் மக்களவைத் தொகுதி அதிமுக உறுப்பினருமான மு.தம்பிதுரை தலைமையிலான நாடாளுமன்ற அதிமுக உறுப்பினர்கள் 48 பேர், திமுகவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் கனிமொழி, திருச்சி சிவா உள்பட 4 பேர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், தருமபுரி தொகுதி பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ், புதுச்சேரி என்ஆர் காங்கிரஸ் கட்சி எம்.பி. ஆர்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் அடங்கிய எம்.பி.க்கள் குழுவினர் சனிக்கிழமை மாலை 5 மணியளவில் தில்லியில் ரேஸ் கோர்ஸ் சாலையில் அமைந்துள்ள பிரதமரின் இல்லத்துக்கு வந்தனர். பிரதமர் மோடியைச் சந்தித்து இக்குழுவினர் சிறிது நேரம் கலந்துரையாடினர். பிரதமரைச் சந்தித்த இந்தக் குழுவில் தமிழக பாஜக எம்.பி.யும், மத்திய அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன் பங்கேற்கவில்லை.அதன் பிறகு, இச்சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை கூறியதாவது: கர்நாடக அரசு மேக்கேதாட்டு பகுதியில் சட்டவிரோதமாகவும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும், நடுவர் மன்றத்தின் தீர்ப்பையும் மதிக்காமல் அணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக ரூ.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது தமிழக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் கர்நாடகம் செய்யும் துரோகமாகும்.இந்தப் பிரச்னையில் மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு, கர்நாடக அரசின் அணை கட்டும் முயற்சியைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனும் தமிழக சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சிகளின் ஒத்துழைப்புடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலை பிரதமரிடம் அளித்துள்ளோம்.

Saturday, 28 March 2015

26.03.15 திண்டுக்கல்லில் கையெழுத்து இயக்கம் . . .

அருமைத் தோழர்களே ! 26.03.15 அன்று திண்டுக்கல்லிலும், காந்தி கிராம கல்லுரியிலும் தோழர்கள்   கையெழுத்து இயக்கம் நடத்தி உள்ளனர். மாவட்ட சங்கம் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறது. 
 ---என்றும் தோழமையுடன், எஸ். சூரியன் ...D/S-BSNLEU.

Friday, 27 March 2015

மதுரை BSNLEU இனைய தளம் 1 லட்சத்தை தாண்டியது ...

அன்பிற்கினியவர்களே ! நமது மதுரை மாவட்ட BSNLEU இனைய தளம் 1 லட்சம் பார்வையாளர்களைத்தை தாண்டியது  என்ற மகிழ்ச்சியான செய்தியை  உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மதுரை மாவட்ட சங்கம் பெருமை கொள்கிறது ...

அருமைத் தோழர்களே ! மதுரை BSNLEU மாவட்ட சங்கம் கடந்த 2013-ம் ஆண்டு மே மாதம் தான் இணையதளத்தை துவக்கியது என்பது நீங்கள் அனைவரும் அறிந்த உண்மை. இரு ஆண்டுகள் கூட நிறைவு பெறாத சூழ்நிலையில்,  அனைவரின் ஒத்துழைப்போடு  இப்போது  1 லட்சம் பார்வையாளர்களையும் தாண்டி பயணிக்கிறது.
தொடர்ந்து உங்கள் அனைவரின் ஆதரவை BSNLEU மதுரை மாவட்ட சங்கம் கோருகிறது...

பாராட்டுக்களுடனும், நன்றியுடனும் ---என்றும் தோழமையுடன், எஸ். சூரியன் ...D/S-BSNLEU.

காட்டூன் . . . கார்னர் . . .



























தமிழகத்திற்கு மோடி அரசு அநீதி அதிமுக மவுனம் ஏன்?

மாநில அரசுகள் மூலம் நிறைவேற்றப்படும் மக்கள் நலத்திட்டங்களுக்கும் சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கும் மத்திய அரசு ஒதுக்கும் நிதியை மோடி தலைமையிலான பாஜக அரசு கடுமையாக வெட்டிச் சுருக்கியுள்ள நிலையில் அதற்கு எதிராக நாடாளுமன்றத்தில் அதிமுக குரல் கொடுக்கமால் மவுனம் சாதித்தது. இது மக்களவைத்தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களித்த மக்களுக்கு செய்த துரோகம். - சட்டமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குழு துணைத் தலைவர் கே.பாலபாரதி
தமிழக சட்டப்பேரவையில் வெள்ளியன்று (மார்ச் 27) நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்தில் பாலபாரதி பேசியது வருமாறு: கடந்த ஆண்டிலிருந்து சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி மாநில அரசுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் தொடர்ந்து 2 ஆண்டுகளாக வரி வருவாய் எதிர்பார்த்த அளவு உயரவில்லை. சர்வதேச அளவில் பெட்ரோலியப் பொருட்களின் சில்லரை விற்பனை விலையில் தொடர்ந்து ஏற்பட்ட மாற்றங்களின் காரணமாக மாநிலத்தின் வருவாய் கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் பெட்ரோல் விலை ரூ. 2.42, டீசல் 2.25 தான் குறைக்கப்பட்டது. ஆனால் மத்திய அரசுக்கு பெட்ரோல் மூலம் ரூ. 7.75, டீசல் மூலம் ரூ. 7.50 கிடைத்தது. மாநில அரசுக்கு வருமானம் 3 மடங்காகும். நிதிச்சுமையும் மானிய வெட்டும்ஏழை, எளியோரைப் பாதுகாக்க வழங்கப்படும்மானியங்களாலும், நாம் தொடர்ந்து செயல்படுத்தி வரும் சமூக நலத்திட்டங்களாலும் நிதிச்சுமை கூடியுள்ளது. மத்திய அரசு சமூக நலச் செலவினங்கள், சாமானிய மக்களுக்கு கொடுக்கப்படும் மானியங்கள் அனைத்தும் வெட்டிச் சுருக்கப்பட்டு விட்டன. இது நிகர உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பில் 2.1 சதவிகிதத்திலிருந்து 1.71 ஆக சுருக்கப்பட்டுள்ளது.
மத்திய ஒதுக்கீடுகள் சரமாரி வெட்டு
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்திட்ட ஒதுக்கீடு ரூ. 35,163 கோடியிலிருந்து, ரூ. 29,653 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற வறுமை நிவாரண ஒதுக்கீடு ரூ. 6,008 கோடியிலிருந்து ரூ. 5000 கோடியாகவும், ஒருங்கிணைந்த குழந்தைகள் நலத்திட்ட ஒதுக்கீடு ரூ. 16,000 கோடியிலிருந்து, சரிபாதியாக ரூ. 8000 கோடியாக சுருக்கப்பட்டுள்ளது. பழங்குடியினர் உப திட்டத்தில் ரூ. 5000 கோடி, தலித் பிரிவினர் உபதிட்டத்தில் ரூ. 12,000 கோடி, பெண்களுக்கான பாலின பாகுபாட்டை களைய வகை செய்யும் திட்டங்களுக்கான நிதி ரூ. 20,000 கோடி வெட்டப்பட்டுள்ளன.அதே நேரத்தில் மத்தியில் உள்ள மோடி தலைமையிலான பாஜக அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச்சலுகையை 30 சதவிகிதத்திலிருந்து 25 சதவிகிதமாக குறைத்துள்ளது. வரி வசூலிப்பதில்லை என 5,89,285 கோடி ரூபாயை தள்ளுபடி செய்துள்ளது.
நம்பிக்கைகளைத் தகர்த்த14வது நிதி ஆணையம்
மத்திய அரசிடமிருந்து அதிக நிதியைப் பெற முடியும் என்ற நம்பிக்கையை 14வது நிதி ஆணையத்தின் பரிந்துரைகள் தகர்த்துவிட்டன. மத்திய, மாநில அரசுகள் மூலமாக நிறைவேற்றப்படும் திட்டங்களுக்கான நிதியை குறைத்துள்ளது. சுற்றுலா கட்டமைப்பு மேம்பாடு, ஊராட்சிகள் வலிமைப்படுத்துதல் திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களை கைவிட்டுள்ளது. ‘வழக்கமான மத்திய உதவி, மாநிலத் திட்டங்களுக்கான சிறப்பு மத்திய உதவி’ - ஆகியவையும் வருங்காலத்தில் கிடைக்காது. 2014-15ம் ஆண்டில் தமிழகத்திற்கு வருடத்தில் ரூ. 1,137 கோடி அளவில் இழப்பு ஏற்படும்.
தமிழகத்திற்கு அநீதி
கால காலமாக பெற்று வந்த குடிசைப் பகுதி மேம்பாடு, பாரம்பரிய நீர்நிலைகளை பாதுகாத்தல், கடலோரப் பாதுகாப்பு, சாலைகளைப் பராமரிப்புக்கான நிதி உள்ளிட்ட பணிகளுக்கான மானியங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. பொதுவான வரித் தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு கிடைத்து வந்த நிதிப் பகிர்வு ரூ. 4.969 சதவிகிதத்திலிருந்து 4.023 சதவிகிதமாக குறைத்தும், சேவை வரித் தொகுப்பிலிருந்து 5.047 சதவிகிதத்திலிருந்து, 4.101 சதவிகிதமாக குறைத்து 14வது நிதி ஆணையம் தமிழகத்திற்கு பெரும் அநீதி இழைத்துள்ளது. இவை குறித்து அதிமுக நாடாளுமன்றத்தில் பேசியதா? போராடியதா என்றால் இல்லை. இவ்வாறு பாலபாரதி பேசினார்.(நாடாளுமன்றத்தில் அதிமுகவின் செயல்பாடு குறித்து மேலும் சிலகருத்துக்களை பாலபாரதி குறிப்பிட்ட போது முதலமைச்சரும் அமைச்சர்களும் குறுக்கிட்டனர். பேரவைத்தலைவர் தனபாலோ வேறு ஒரு சபையை பற்றி இங்கே பேசவேண்டாம் என்று கூறி வேறு பொருள் பற்றிபேசுமாறு கேட்டுக்கொண்டார்.)---தீக்கதிர் 

26.03.15 மதுரையில் 3 இடங்களில் கையெழுத்து இயக்கம்...

அருமைத் தோழர்களே ! 26.03.15 அன்று  மாலையில்  மதுரையில், பெரியார் பஸ் நிலையம், ஆரப்பாளையம்பஸ்நிலையம்,மாட்டுத்தாவணி பஸ் நிலையம் ஆகிய 3 இடங்களில்  கையெழுத்து இயக்கம் மிக சிறப்பாக நடைபெற்றது ...
ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் AIIEA சங்கத்தின் சார்பாக இன்சூரன்ஸ் தோழர்கள் பாரட்டக்கூடிய அளவில் கிட்டத்தட்ட 50 பேர் அதிக எண்ணிக்கையில் ஈடு பட்டனர். அனைவருக்கும் நமது உளப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
அதே போன்று மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் நமது BSNLEU தோழர்கள் கிட்டத்தட்ட  25 பேர் கலந்து கொண்டு  பஸ் நிலையத்தின் பல்வேறு பக்கங்களுக்கும் சென்று அனைத்து மக்களிடமும் விளக்க நோட்டிஸ் வழங்கி பொது மக்களிடமும் கையெழுத்தை பெற்றனர்.
மேலும் பெரியார் பஸ் நிலையத்தில் 10 க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள். ஆசிரியர்கள் பங்கு பெற்று பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கத்தை நடத்தினார்கள்  அனைவருக்கும் நமது உளப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
பொது மக்களிடம் "SAVE BSNL" என்ற கோரிக்கையை வலியுறித்தி நோட்டிஸ் கொடுத்து கையெழுத்து பெறுகின்ற பொழுது பல்வேறு அனுபவங்கள் நமக்கு கிடைக்கின்றது. தொடர்ந்து நமது இயக்கத்தை நடத்துவோம், அதே வேகத்துடன் எதிர் வரும் ஏப்ரல் மாதம் 21 & 22 ஆகிய இரு நாட்கள் வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்துவோம்.

--- என்றும் தோழமையுடன், எஸ். சூரியன் ...D/S-BSNLEU