Tuesday, 17 March 2015

சங்க நிர்வாகி IMMUNITY FROM TRANSFER விதிவிலக்கு...

BSNLலில் அங்கீகரிக்கப்பட்ட முதலாம் மற்றும் இரண்டாம் சங்கங்களின் நிர்வாகிகளுக்கு மாற்றலில் இருந்து விதிவிலக்கு அளித்து BSNL நிர்வாகம் ஏற்கனவே உத்திரவிட்டிருந்தது. அதில் கூடுதல் திருத்தங்கள் செய்து 13/03/2015 அன்று மேலும்  உத்திரவு வெளியிட்டுள்ளது.அதன் அடிப்படையில் . . .
  * அங்கீகரிக்கப்பட்ட  முதல் மற்றும் இரண்டாம் சங்கங்களின் செயலர்,உதவிச்செயலர்  மற்றும் பொருளாளர் ஆகியோருக்கு மாற்றலில்  இருந்து விலக்கு அளிக்கப்படும்
  * அங்கீகார காலமான 25/04/2013 முதல்  24/04/2016 வரை  இந்த   விலக்கு அளிக்கப்படும்.
  * மேற்கண்ட சலுகை அகில இந்திய சங்கம் , மாநிலம் மற்றும் மாவட்டச்சங்கங்களுக்கு  பொருந்தும்,. கிளைகளுக்கு இச்சலுகை இல்லை.
  * சங்கம் மாறினாலும்  இச்சலுகையை ஒரு முறை மட்டுமே அனுபவிக்க முடியும். மாற்று சங்கங்களுக்கு சென்று மறுபடியும் இச்சலுகையை அனுபவிக்க முடியாது
  * மாவட்ட மட்டத்தில் ஒரு முறை அனுபவித்தால் மறுமுறை மாநில அளவில்தான் சலுகையை அனுபவிக்க  இயலும்.
  * அதிகாரிகள் சங்கங்களுக்கான மாற்றல் விதிவிலக்கு உத்திரவில் மேற்கண்ட சலுகை அங்கீகார காலம் முழுமையும் செல்லும் என நிர்வாகம் கூறியிருந்தது. தற்போது இது ஊழியர் சங்கங்களுக்கும் பொருந்தும் என நிர்வாகம்  கீழ்கண்ட வாறு உத்திரவிட்டுள்ளது. . . .  உத்தரவை காண இங்கே கிளிக் செய்யவும்.

No comments: