அருமைத் தோழர்களே ! கடந்த 2014-ம் ஆண்டு இதே மார்ச் 23 அன்று நமது மதுரை மாவட்ட சங்கத்தின் சார்பாக மகளீர் தினம் - சங்க அமைப்பு தினம் - மாவீரன் பகத்சிங் தினம் ஆகிய முப்பெரும் நிகழ்ச்சிகளை மிக மிக சிறப்பாக நடத்தினோம் ...
அதே போன்று இவ்வாண்டும் 23.03.2015 அன்று திங்கள் மாலை 5 மணிக்கு மேல் மதுரை பொது மேலாளர் அலுவலகத்தில் உள்ள மனமகிழ் மன்றத்தில் நமது மதுரை மாவட்ட சங்கத்தின் சார்பாக மகளீர் தினம் - சங்க அமைப்பு தினம் - மாவீரன் பகத்சிங் தினம் ஆகிய முப்பெரும் நிகழ்ச்சிகளை அனைவரும் பாராட்டும் வண்ணம் நடத்தினோம்.
நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து முன்மொழிவை BSNLEU மாவட்டச் செயலர் தோழர்.எஸ். சூரியன் அவவை முன்வைத்து உரையாற்றினார். தோழர்கள் சி. செல்வின் சத்தியராஜ் & கே.வீரபத்திரன் இருவரும் கூட்டுத் தலைமையேற்றனர்.
BSNLEU & TNTCWU ஆகிய இரு சங்கங்களின் அமைப்பு தினம் குறித்தும், சங்கத்தின்-அமைப்பின் முக்கியம்,அவசியம் குறித்தும் TNTCWU சங்கத்தின் மாநிலத் தலைவரும், BSNLEU சங்கத்தின் மாநில உதவிச்செயலருமான தோழர்.எம். முருகையா சிறப்புரை நிகழ்த்தினார்.
மகளீருக்கான உரிமைகள், கடமைகள் குறித்தும் மத்திய மாநில அரசுகளின் தவறான கொள்கைகளினால் எப்படி பட்ட பாதிப்புகளை எல்லாம் பெண்கள் அடைகிறார்கள். ஆகவே, அதிலிருந்து விடுபட பெண்களுக்கு எப்படிப்பட்ட விழிப்புணர்வு தேவை என்பன குறித்து AIIEA உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் தோழியர். அருணா அவர்கள் மிகவும் எளிமையாக புரியும் வண்ணம் உரை நிகழ்த்தினார்.
மாவீரன் பகத்சிங் இந்திய விடுதலைக்கான போராட்டத்தில் எவ்வாறு தன்னை இணைத்துக்கொண்டார், தனது இளம் வயது முதற்கொண்டு எவ்வாறு சுதந்திர வேட்கை யோடு செயல்பட்டார் என்பது குறித்தும், அந்நிய கம்பெனிகளை இந்திய நாட்டிலிருந்து அடித்து விரட்ட வேண்டிய அவசியம் குறித்தும் மாவீரன் பகத்சிங் இந்திய தேசத்தின் மீதுள்ள நீங்க பற்று குறித்தும் CITU தலைவர்களில் ஒருவரான தோழர்.பா.விக்ரமன் அவர்கள் எழுச்சி உரை நிகழ்த்தினார். தோழர் என். சோனைமுத்து,TNTCWU மாவட்டசெயலர் நன்றி கூற விழா இனிதே நிறைவுற்றது.நிகழ்ச்சியில் திரளாக கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டுக்களையும், நன்றியையும் உரித்தாக்குகின்றோம்.
1 comment:
நிகழ்வுகள் மகிழ்வினை அளிக்கின்றன ஐயா
Post a Comment