Wednesday 4 March 2015

போக்குவரத்து ஊழியர்கள் பணியாற்றிய காலத்திற்கு ஓய்வூதியம்.

அரசுப் போக்குவரத்துத் துறையில் பணிநியமனம் பெற்று 1. 9. 1998 க்கு பிறகுபோக்குவரத்துக் கழக நிர்வாகத்தில் ஓய்வு பெற்றோருக்குஅரசுத்துறை பணிக்காலத்திற்குரிய ஓய்வூதியம் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது.தமிழ்நாடு அரசுப்போக்குவரத்து துறை முடிவுக்கு வந்து ஏறத்தாழ 40ஆண்டுகளாகிறது. இதில் பணி நியமனம் பெற்ற, போக்குவரத்துக் கழகங்களாக மாறிய பின்னர் 1.9.98லிருந்து போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் முன்னாள் அரசுப் போக்குவரத்துத்துறை ஊழியர்களுக்கு சட்டப்படி வழங்க வேண்டிய ஓய்வூதியத்தை வழங்காமல் அரசும் போக்குவரத்துக் கழகங்களும் இழுத்தடித்து வந்தன.இதையடுத்து கடந்த 2014ஆம்ஆண்டு ஏப்ரல் மாதம்16ஆம் தேதி உச்சநீதிமன்றம் முன்னாள் அரசுப்போக்குவரத்துத்துறை ஊழியர்களுக்கு 6மாத காலத்திற்குள் 9சதவீத வட்டியுடன் ஓய்வூதியம் வழங்கவேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பை ஏற்று ஓய்வூதியம் வழங்காமல் வழக்கம்போல் மாநில அரசு காலதாமதம் செய்துவந்தது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சென்னைஉயர்நீதிமன்றத்தில் போக்குவரத்துத்துறை செயலர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றைத் தொடுத்தது.இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் கடந்த மாதம் 24ஆம் தேதி வழங்கிய உத்தரவில் நான்கு மாதங்களுக்குள் ஓய்வூதியம் வழங்க போக்குவரத்துத்துறை செயலாளருக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவு காரணமாக 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்னாள் அரசுப்போக்குவரத்துத்துறை ஊழியர்கள் பயன்பெறுவர். இதன் மூலம் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.4லட்சத்திற்கு மேல் ஓய்வூதிய நிலுவைத்தொகைகள் கிடைக்கும்.இதனை தமிழ்நாடு அரசுபோக்குவரத்துக் கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் பொதுச்செயலாளர் கி.கண்ணன் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

No comments: