காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் நோக்கத்தோடு துவக்கப்பட்ட மீத்தேன் தோண்டியெடுக்கும் திட்டத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. காவிரி டெல்டாவில் இடைவிடாமல் நடந்த விவசாயிகளது கிளர்ச்சிகளின் பின்னணியில், நாடாளுமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலையீட்டைத் தொடர்ந்து, மேற்கண்ட அறிவிப்பினை மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்றுள்ளது. இது காவிரி டெல்டா விவசாயிகளின் மகத்தான போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி என்று குறிப்பிட்டுள்ளது.
விவசாயிகள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி : பெ.சண்முகம்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் மீத்தேன் எரிவாயு எடுக்க மத்திய - மாநில அரசுகள் கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருந்தது. மீத்தேன் திட்டம் செயல்படுத்தப்பட்டால் நிலத்தடி நீர்வளம் முற்றிலும் அழிந்து காவிரி டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும் என்ற அச்சம் அனைத்து பகுதி மக்களிடமும் ஏற்பட்டிருந்தது. விவசாயிகள் மற்றும் மாவட்ட மக்கள் கடுமையான தொடர் போராட்டங் களில் ஈடுபட்டனர்.இதனால்மீத்தேன் திட்டம் தொடர் பான பணிகள் தடுத்து நிறுத்தப் பட்டிருந்தன. மீத்தேன் திட்டத்தை முற்றாக ரத்துசெய்ய வேண்டுமென்று கருத்து கேட்பு கூட்டம்நடைபெற்றது.முதல் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி வந்தது. மற்ற பல்வேறு அமைப்புகளும் இதே கோரிக்கையை வற்புறுத்தின. இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்நாடாளுமன்ற உறுப்பினர்டி.கே.ரங்கராஜன், மாநிலங்களவையில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மீத்தேன் எடுப்பதற்காக கிரேட்ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசன் உடன் போடப்பட்டிருந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன என்று நாடாளுமன்றத்தில் அறிவித்திருப்பது மக்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும். மத்திய அரசு ஒப்பந்தத்தைரத்து செய்யும் நடவடிக்கையை துரிதப்படுத்துவதுடன், வேறு எந்த நிறுவனத்திற்கும் மீத்தேன் எடுக்கும் உரிமை வழங்கக் கூடாது என்றும், காவிரி டெல்டாவில் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை முற்றிலுமாக கைவிடும் அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டுமென்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கேட்டுக்கொள்கிறது..
No comments:
Post a Comment