புதிய பென்சன் திட்டத்திற்கு எதிராக தொழிலாளி வர்க்கத்தின் போராட்டம் மேலும் கூர்மையடையும் என்று முதுபெரும் தொழிற்சங்கத் தலைவர் எல்ஐசி நாராயணன் நம்பிக்கை தெரிவித்தார். திண்டுக்கல்லில் இதுபற்றி அவர் கூறியதாவது: தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக என்பது வெறும் வார்த்தையல்ல, கோரிக்கையின் அடிப்படையில் தொழிலாளர்களை கட்சி பேதமின்றி அனைவரையும் இணைக்கும் மந்திரச்சொல்லாகும். இன்றைக்கு பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக உலகமயமாக்கலை மிக தீவிரமாக அமலாக்கிக் கொண்டு இருக்கும் மத்தியில் ஆளும் பாஜகவினுடைய தொழிற்சங்கமான பிஎம்எஸ் போன்ற அமைப்புகள் கூட தொழிலாளர் நலன் பறிபோகாமல் இருக்க போராட்டக் களத்திற்கு வந்துள்ளன. நாடாளுமன்றத்தில் இடதுசாரிகளின் பலம் குறைந்திருந்தாலும் நாடு முழுவதும் மக்கள் மன்றத்தில் தொடர்ச்சியான போராட்டங்களை தொழிலாளி வர்க்கம் நடத்தி வருகிறது. முன்பெல்லாம் கேரள மக்கள் தங்களது உரிமைகளுக்காக தொடர்ந்து போராடும் போதெல்லாம் தமிழக மக்கள் தங்களது உரிமைக்காக போராடாமல் இருப்பது கண்டு நான் வேதனைப்பட்டுள்ளேன். ஆனால் தற்போது தொலைக்காட்சிகளில் தமிழக மக்கள் தங்கள் உரிமைக்காக போராடுவது பற்றிய செய்திகள் அதிகம் வருவதை பார்க்க முடிகிறது. குடிநீர் பிரச்சனை முதல் மீனவர் பிரச்சனை வரை மக்கள் தங்கள் கோரிக்கைகளுக்காக கட்சிபேதமின்றி போராடுகிறார்கள். இப்படிப்பட்ட போராட்டங்கள் தமிழகத்தில் தொடர்வதற்கு மார்க்சிஸ்ட்டுகளும் இடதுசாரிகளும் கற்றுத் தந்த பாடமேயன்றி வேறில்லை. இடதுசாரிகள் நடத்திய பல்வேறு போராட்டங்களின் பலனை மக்கள் அனுபவித்து வருகிறார்கள். அதனைஎளிதில் மக்கள் விட்டுக் கொடுக்கமாட்டார்கள். உதாரணமாக ஆசிரியர்கள் 35 ஆயி ரம் ரூபாய் வரை பென்சன் பெறுகிறார்கள். அவர்களது குடும்பம் மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் மத்திய அரசு புதிய பென்சன் திட்டத்தை அமல்படுத்தி வரு கிறது. ஆனால் பழைய பென்சன் திட்டமே சிறந்தது என்ற மனோபாவம் அனைத்து ஊழியர்களிடையே உள்ளது. எனவே பழைய பென்சன் திட்டம் தொடர வேண்டும் என்பதற்காக நடத்துகிற போராட்டம் மேலும் கூர்மையடையும் என்பதில் சந்தேகமில்லை....
No comments:
Post a Comment