Sunday, 15 March 2015

பங்குச் சந்தையில் P.F. பணம் - அரசாங்கத்திற்கு எந்த அதிகாரமும் கிடையாது மாநிலங்களவையில் தபன்சென் M.P.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் தொழிலாளர்கள் சேமித்து வைத்துள்ள தொகையை பங்குச் சந்தையில் முதலீடு செய்திட அரசாங்கத்திற்கு எந்த அதிகாரமும் கிடையாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி மாநிலங்களவை உறுப்பினர் தபன்சென் கூறினார். நாடாளு மன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை எழுப் பும் நேரத்தில் CITU பொதுச் செயலாளர் தபன்சென் கூறிய தாவது:“பி.எப். நிதியில் தொழிலா ளர்களால் சேமித்து வைக்கப்பட்டுள்ள வாழ்நாள் சேமிப்புநிதியை மத்தியஅரசும் நிதிஅமைச்சகமும் சட்ட விரோதமான முறையிலும் தான்தோன்றித் தனமாகவும் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய முன்வந்திருப்பதை இந்த அவையின்கவனத்திற்குக்கொண்டுவருகிறேன்.அரசாங்கம்,தொழிலாளர்வைப்புநிதியிலிருந்து 15 சதவீதம் தொகையை எடுத்து, பங்குச்சந்தையிலும், மேலும் 5 சதவீதம் எடுத்து பங்குச் சந்தை தொடர்பான இதர நிறுவனங் களிலும் முதலீடு செய்திட 2015 மார்ச் 2ம் தேதிய அறிவிக்கை யின்படி முடிவு செய்துள்ளது. ஊழியர்களின் வாழ்நாள் சேமிப்புத் தொகையை பங்குச்சந்தை வணிகத்தில் இவ்வாறுதிருப்பிவிடுவது அவர்களதுசேமிப்புத் தொகையின் பாது காப்பிற்கு இடரினை ஏற்ப டுத்திடும். ஓய்வு பெறும் சமயத் தில் தொழி லாளி பெறவிருக்கும் பணப் பயனை மிகவும் ஆபத்திற் குள்ளாக்கிடும்.
தொழிலாளர்களுக்குச் சொந்தம்
பி.எப். என்பது ஊழியர் வைப்பு நிதி மற்றும் பல்வகை ஷரத்துக்கள் சட்டத்தின்படி நிர் வகிக்கப்பட்டு வருகிறது. தொழி லாளிகளின் சம்பளத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட அளவு பிடித் தம் செய்தும், அதே அளவு வேலையளிப்பவர் அளிப்பதன் மூலமும் இந்த நிதியம் உருவாக் கப்படுகிறது. அவ்வாறு வேலையளிப்பவர் அளிக்கும் நிதியும்,தொழிலாளியின் ஊதியமா கவே கருதப்படும். தொழிலா ளியின் சமூகப் பாதுகாப்புக் காரணங்களுக்காக இவ்வாறு கட் டாயமான முறையில் சேமிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.எனவே, ஒட்டுமொத்த நிதியும் தொழிலாளர்களுக்கே சொந்த மாகும். அத்தொகையை முதலீடு செய்வது தொடர்பாக அரசாங்கம் தீர்மானிப்பதற்கு எவ்வித உரிமையும் கிடையாது. சட்டம் அந்தவகையில்தான் இயற்றப்பட்டிருக்கிறது. ஊழியர் வைப்பு நிதிச் சட்டத்தின்கீழ் மத்திய அறக்காவலர் குழு என்கிற ஒரு முத்தரப்பு குழுஇதற்காக அமைக்கப்பட்டிருக் கிறது. இக்குழுதான் இத் தொகைகளை முதலீடு செய்வது தொடர்பாக அவ்வப்போது கூடி முடிவு செய்யும். இக்குழு கடைசி யாக 2013 நவம்பரில் கூடி தீர்மா னித்திருக்கிறது. அந்த முடிவுகள் ஜனவரி 1லிருந்து அமலுக்கு வருகிறது.
அரசுக்கு உரிமை இல்லை
இந்த நிலையில் தொழிலா ளர்களுக்கு மட்டுமே முழுக்க முழுக்கச் சொந்தமான இந்த நிதி குறித்து தீர்மானிப்பதற்கோ, அதனை பங்குச்சந்தையில் ஊக வர்த்தகத்தில் முதலீடுசெய்வதற்கோ அரசாங்கத் திற்கு எந்தவிதத்தில் உரிமைஇருக்கிறது? இதில் உள்ள தொகை முழுவதும் முற்றிலுமாக தொழிலாளர்களுக்கு மட்டுமே சொந்தமாகும்.மேலும், நிதி அமைச்சர் தன் பட்ஜெட் உரையில், ஊழியர் வைப்பு நிதியிலி ருந்து ஆறாயிரம் கோடி ரூபாயை எடுத்து பொது நல அமைப்புகளில் போடப்படும் என்று கூறியிருக்கிறார். மேலும்ஊழியர் வைப்பு நிதி அமைப் பையே மாற்றி அமைக்க இருப்ப தாகவும் கூறியிருக்கிறார். இவ்வா றெல்லாம் செயல்படுவதற்கு அரசாங்கத்திற்கு எந்த அதிகாரமும் கிடையாது. ஊழியர்வைப்பு நிதி முன்பிருந்ததைப் போலவே நிர்வகிக்கப்பட அரசாங்கம் மீளவும் முன்வர வேண்டும்.
நிறுத்திக் கொள்ளுங்கள்
தொழிலாளர்களின் வாழ் நாள் சேமிப்புத் தொகையை இவ்வாறு ஊகவர்த்தகத்திலும் சூதாட்டத்திலும் செலுத்தி, அதன்மூலம் ஊகவர்த்தகப் புள்ளிகள் தொழிலாளர் பணத்தில் சூதாடுவதற்கு அனுமதிப் பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இதை இந்த அரசுநிறுத்த வேண்டும். மத்திய அறங்காவலர் குழு நேற்றைய தினம் சந்தித்தது. அவர்கள் அரசின் இத்தகைய முன் மொழிவை ஏற்கனவே நிராக ரித்திருக்கிறார்கள்.மத்திய அறங்காவலர் குழுவின் தலைவர் மத்திய தொழிலாளர்நலத்துறை அமைச்சர்தான் என்பதை தயவு செய்து குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அரசின் இத்த கைய மூலதனத் திட்டத்தை நிரா கரித்து, திரும்பவும் அதனை நிதி அமைச்சருக்கு அனுப்பி வைத்த முடிவில் அவருக்கும் பங்கு உண்டு. இந்தச் சட்டத்தின்படி மத்திய அறங்காவலர் குழு ஒருமனதாக எடுத்த முடிவே தொடர வேண்டும். அந்த விதத்தில் அரசாங்கம் தன் முடிவை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும் என்று தங்கள் மூலமாக இந்த அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.’’இவ்வாறு தபன்சென் கூறினார்

No comments: