Monday 9 March 2015

BSNL ஊழியர்கள் + அதிகாரிகள் ஏப். 21-22-ல் வேலைநிறுத்தம்...

நாடு முழுவதும் பணியாற்றும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் வரும் ஏப்ரல் 21-22 ஆகியஇரு நாட்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள். இது தொடர்பாக பிஎஸ்என்எல் ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பின் கன்வீனர் வி..என். நம்பூதிரி ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:“நாடு முழுவதும் பணியாற்றும் சுமார் 2.5 லட்சம் பிஎஸ்என்எல் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள், பிஎஸ்என்எல் நிறுவனத்தைப் புதுப்பித்திட உரிய நடவடிக்கைகள் எடுக்க அரசாங்கத்தையும், பிஎஸ்என்எல் நிர்வாகத்தையும் வலியுறுத்தி, வரும் ஏப்ரல் 21 – 22 ஆகிய இரு நாட்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள்.பொதுத்துறை டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல், நாட்டில் இயங்கும் டெலிகாம் நிறுவனங்களில் முதலாவதாகும். 2007ஆம் ஆண்டுவரை நன்கு வளர்ந்து கொண்டிருந்த இந்நிறுவனத்தை, அதன்பின் அரசாங்கம் அதன் மொபைல் சாதனங்களின் 45 மில்லியன் டெண்டர்களை ரத்து செய்தும், பின்னர் 93 மில்லியன் டெண்டர்களையும், மேலும் 5 மில்லியன் டெண்டர்களையும் ரத்து செய்தும், பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய இணைப்புகளை வழங்கமுடியாத அளவிற்கு சக்தியற்றதாக மாற்றி வைத்திருக்கிறது. தனியார் கம்பெனிகளை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கத்துடனேயே அரசாங்கம் இவ்வாறு செய்து வருகிறது. அதேபோன்று பிஎஸ்என்எல் நிர்வாகமும் புதிய இணைப்புகளுக்குத் தேவைப்படும் கேபிள், டெலிபோன் சாதனங்கள், ஒயர்கள், பிராட்பேண்ட் மோடம் போன்றவற்றைக் கொள்முதல் செய்யாமல் இருக்கிறது. மேலும் பிஎஸ்என்எல் நிறுவனத்திடமிருந்து ரொக்க இருப்புத்தொகையான 40 ஆயிரம் கோடி ரூபாயையும் அரசாங்கம் அலைக்கற்றைக் கட்டணம், கற்பிதமான கடன் (சூடிவiடியேட டுடியn), வட்டி என்ற பெயர்களால் எடுத்துக் கொண்டுவிட்டது. இவ்வாறு பிஎஸ்என்எல் நிறுவனம் தற்சமயம் சாதனங்களை வாங்குவதற்கு பணமில்லாமல் முடங்கிக்கிடக்கிறது.இவ்வாறு அரசாங்கம் பிஎஸ்என்எல் நிறுவனத்தை முடக்க முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், பிஎஸ்என்எல் நிறுவனம் ஆண்டு வருவாயை 26 ஆயிரம் கோடிரூபாயிலிருந்து 27 ஆயிரம் கோடி ரூபாய் வரை ஈட்டி, நஷ்டத்தைக் கணிசமான அளவிற்குக் குறைத்திருக்கிறது.
ஊழியர்களின் விடாமுயற்சியே இதற்கு முக்கியக் காரணமாகும். பிஎஸ்என்எல் நிறுவனம் டெலிபோன் சாதனங்களை வாங்குவதற்கு ஏதுவாக, இரண்டு ஆண்டுகளுக்கு முன் அலைக்கற்றைகளுக்காகப் பெற்ற 6700 கோடி ரூபாயைத் திரும்ப அளித்திட வேண்டும். அதேபோன்று, பிஎஸ்என்எல்-க்கு ஒதுக்கியுள்ள 1250 கோடி ரூபாயையும் அளித்திட வேண்டும். தனியார் ஆதரவு நிலைப்பாட்டிற்கு மாறாக அரசாங்கம் பொதுத்துறை ஆதரவு நிலைப்பாட்டை எடுத்திட வேண்டும்.இவ்வாறு பிஎஸ்என்எல்நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை அளித்திடக் கூடிய விதத்தில் நிறுவனத்தைப் புதுப்பித்திட வேண்டும் என்று வலியுறுத்தி, வரும் ஏப்ரல் 21 – 22 தேதிகளில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள்.மார்ச் 17 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் என்றுமுன்பு மேற்கொள்ளப்பட்ட முடிவு பல்வேறு காரணங்களால் ஒத்திவைக்கப்படுகிறது.பிஎஸ்என்எல் நிறுவனத்தைப் புதுப்பித்து, சிறந்த சேவைஅளித்திட மக்களின் ஆதரவை, பிஎஸ்என்எல் சங்கங்களின் கூட்டமைப்பு கோருகிறது.இவ்வாறு வி..என்.நம்பூதிரி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

போராட்டம் வெற்றி பெறட்டும்
கோரிக்கைகள் வெல்லட்டும்