Wednesday 4 March 2015

போடி-மதுரை ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்கக் கோரி M.L.A லாசர்.

போடி-மதுரை, திண்டுக்கல்-லோயர்கேம்ப் அகல ரயில்பாதை திட்டத்திற்கு தேவையான நிதி ஒதுக்கி, திட்டத்தை நிறைவேற்றக் கோரிதொடர் இயக்கங்கள் நடத்தஅகல ரயில்பாதை திட்டஅமலாக்கக்குழு முடிவு செய்துள்ளதாக குழுவின்ன் தலைவர் .லாசர் எம்எல்ஏ தெரிவித்துள்ளார். தேனியில் செவ்வாயன்று செய்தியாளர் களிடம் .லாசர் எம்எல்ஏ கூறியதாவது: நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ரயில்வே பட்ஜெட்டில் போடி-மதுரை அகல ரயில்பாதை திட்டத்திற்கு வெறும் 10 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது. போராட்டக்குழு சார்பில் வன்மையாக கண்டிக்கின்றோம். கடந்த 2010ம் ஆண்டு போடி -மதுரை ரயில்பாதையை அகல ரயில்பாதையாக மாற்றப்போவதாக அறிவித்த மத்திய அரசு, ரயிலை நிறுத்தி ரூ.17 கோடியை 3 தவணைகளில் ஒதுக்கி திட்டத்தை கிடப்பில் போட்டது. பல்வேறு கட்ட போராட்டம் நடத்தியும் இத்திட்டத்திற்கு காங்கிரஸ் அரசுநிதி ஒதுக்கவில்லை. தற்போதுள்ள பாஜக அரசும் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கவில்லை. கடந்த 4 ஆண்டுகாலமாக போடி -மதுரை அகல ரயில்பாதை திட்டத்திற்கு போராடி வருகிறோம். தற்போதுள்ள பாஜக அரசுக்கும் போராட்டக்குழு சார்பில் நிதி ஒதுக்கக் கோரி மனு அளித்தோம். கடந்த மாதம் தேனி மாவட்டத்திற்கு வந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை, போராட்டக்குழுவினர் நேரில் சந்தித்து இத்திட்டத்திற்கு உதவும்படி வலியுறுத்தினோம். இத்திட்டம் நிறைவேற மாநிலஅரசு, மத்திய அரசை வலியுறுத்த வேண்டுமென தமிழகமுதல்வருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. தமிழகத்திலுள்ள 39 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ரயில் இல்லாத மாவட்டமாக தேனி இருப்பதை சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. கடந்த 50 ஆண்டுகாலமாக ஆய்வு நிலையிலேயே உள்ள திண்டுக்கல் - லோயர்கேம்ப் வரையிலான அகல ரயில்பாதை திட்டத்திற்கு மத்திய அரசு நிதியை ஒதுக்கி நிறைவேற்ற வேண்டும். கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் ரயில்வே திட்டங்களுக்கு மாநில அரசு பங்குத்தொகை வழங்கியுள்ளது. அதேபோல தமிழக அரசும் போடி-மதுரை அகல ரயில்பாதை திட்டத்திற்கு பங்குத்தொகை ஒதுக்கி இத்திட்டத்தை துரிதமாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி தேனி மாவட்டத்தில் 3 கட்ட இயக்கம் நடத்தபோராட்டக்குழு முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக போடி, ஆண்டிபட்டி, சின்னமனூர், கம்பம் உள்ளிட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது. அடுத்த கட்டமாக தமிழக முதல்வர், மத்திய ரயில்வே அமைச்சர் ஆகியோரை சந்தித்து இத்திட்டத்திற்கு உடனடியாக ரூ.50 கோடி ஒதுக்கவேண்டும் என வலியுறுத்துவது. தேனியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்கும் கோரிக்கை மாநாடு நடத்துவது என்றும் அதன் பிறகுமாவட்டம் முழுவதும் முழுவேலைநிறுத்தப் போராட்டம், மனிதச் சங்கிலி இயக்கம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.இவ்வாறு .லாசர் MLA தெரிவித்தார். ஆலோசனைக்கூட்டத்தில் உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத் தலைவர் எம்.எம்.ஆனந்தவேல், ரயில்வே கமிட்டி செயலாளர் பி.சி.ராஜேந்திரன், பொருளாளர் கே.எஸ்.கே.நடேசன், துணைத் தலைவர்கள் பி.ராமமூர்த்தி, இணைச் செயலாளர்கள் எல்.ஆர்.சங்கரசுப்பு, பி.பாஸ்கரன், கே.சீனிவாசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் டி.வெங்கடேசன், விவசாயிகள் சங்கத் தலைவர் கே.ராஜப்பன், லாரி உரிமையாளர் சங்க தலைவர் எஸ்.பி.சுகுமாறன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

No comments: