மோடி அரசாங்கம் ‘பெல்’ நிறுவனம் பங்குகளை மேலும் 5 சதவீதம் விற்பது என முடிவு செய்துள்ளது. ஏற்கெனவே பெல்நிறுவனத் தின் 37 சதவீதம் பங்குகள் விற்கப் பட்டுவிட்டன. மேலும் 5 சதவீதம் பங்குகள் விற்கப்பட்டால் அரசின் கைவசம் உள்ள பங்குகள் 58 சதவீதமாக குறைந்துவிடும். இதனைக்கண்டித்து திருச்சி பெல் அமைப் பின் அனைத்து சங்கங்களும் கூட்டுக்குழு அமைத்து கண்டன இயக்கங்களை நடத்தி வரு கின்றன. CITU, LPF., INTUC, AIADMK, பாய்லர் பிளாண்ட் அம்பேத்கர் சங்கம், BMS, AITUC, பிபிடபிள்யுயு மற்றும் பல சங்கங்கள் இணைந்து
இந்த கண்டன இயக்கத்தை நடத்தி வருகின்றன.
.இதன் ஒரு பகுதியாக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பெல் பிரதான வாயிலிலிருந்து திருவரம்பூர்வரை ஊர்வலமாகச் சென்று மறியல் செய்தனர். இதனைத் தடுத்து காவல்துறையினர் தொழிற்சங்கதலைவர்கள் உட்பட நூற்றுக்கணக்கானவர்களை கைது செய்தனர். கைது செய்யப் பட்ட ஊழியர்கள் இரவு 8 மணிக்கு மேல் விடுவிக்கப்பட்டனர். பங்கு விற்பனையைக் கண்டித்து பிரதமருக்கு மின்னஞ்சல் அனுப்பும் இயக்கம், கண்டன கருத்தரங்கம் உட்பட ஏராளமான இயக்கங்களை நடத்துவது என தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.
No comments:
Post a Comment