Monday 9 March 2015

09.03.15 இன்சூரன்ஸ் ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்.

09.03.2015 அன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் LIC ஊழியர்களுக்கு ஆதரவாக தோள் கொடுப்போம்
காப்பீட்டுத்துறையை தனியாருக்குத் தாரைவார்க்கத் துடிக்கும் நரேந்திர மோடி அரசைக் கண்டித்து திங்களன்று நாடு முழுவதும் ஆயுள் காப்பீடு மற்றும் பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர். காப்பீட்டுத்துறை யில் அந்நிய முதலீட்டுவரம்பை உயர்த்துவதற் கான மசோதாவை ஜனநாயக மரபுகளுக்கு எதிராகமக்களவையில் நிறைவேற்றியுள்ளதைக் கண்டித்து இந்த வேலைநிறுத்தம் நடைபெறவுள்ளது.
காப்பீட்டுத்துறை மசோதா மாநிலங்களவையில் நிலுவையில் உள்ள நிலையில் மோடி அரசு அவசர அவசரமாக மக்களவையில் மசோதாவை தாக்கல் செய்து நிறைவேற்றியுள்ளது. இதைக் கண்டித்து திங்களன்று வேலை நிறுத்தம் நடைபெறவுள்ளது. வேலைநிறுத்தத் தில் ஈடுபடும் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்யவும் முடிவு செய்துள்ளனர்.
இன்சூரன்ஸ் மசோதாவிற்கு எதிராக மதுரையில் இன்று சிஐடியு தர்ணா
இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிக்கக்கூடாது. இன்சூரன்ஸ் சட்டத்திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் சிஐடியு சார்பில் மார்ச்-9ம்தேதி தர்ணா நடைபெறுகிறது.பொதுபட்ஜெட்டில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கியுள்ள சலுகைகளை ரத்து செய்யவேண்டும். ஏழைகளுக்குவழங்கி வரும் மானியத்தைக் குறைக்கக்கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை ஆறுமுச்சந்தியில் மாலை 6 மணியளவில் தர்ணா நடைபெறுகிறது.சிஐடியு மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் ஆர்.கருமலையான், மாநிலச் செயலாளர் வீ.பிச்சை, மாவட்டச் செயலாளர் இரா.தெய்வராஜ், மாவட்ட உதவிச்செயலாளர் இரா.லெனின், மாவட்ட துணைத் தலைவர் பா.விக்ரமன், மாநிலக்குழு உறுப்பினர்கள் சி.சுப்பையா, எஸ்.சந்தியாகு, ஆர்.வாசுதேவன், பா.பழனியம்மாள்   மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கின் றனர்.

No comments: