Wednesday 25 March 2015

முதல் முறையாக இறுதிச் சுற்றில் நியூஸிலாந்து...

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு நியூஸிலாந்து முதல் முறையாக முன்னேறியது.
 
நியூஸிலாந்து - தென் ஆப்பிரிக்க அணிகள் மோதிய முதல் அரையிறுதி ஆட்டம் ஆக்லாந்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்தது.
 
மழை குறுக்கிட்டதால் 43 ஓவர்களாக நிர்ணயிக்கப்பட்ட ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 5 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்தது. டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 43 ஓவர்களில் 298 ரன்கள் நியூஸிலாந்துக்கு வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. கடைசிவரை பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஒரு பந்து மீதம் இருக்க 4 விக்கெட் வித்தியாசத்தில் "திரில்' வெற்றியைப் பெற்றது நியூஸிலாந்து.
 
இதற்கு முன்பு 6 முறை அரையிறுதிக்கு முன்னேறியும் இறுதி ஆட்டத்துக்கு நுழைய முடியாமல் போன நியூஸிலாந்து இந்த முறை தென் ஆப்பிரிக்காவிடம் போராடி வென்று இறுதிச் சுற்றில் நுழைந்திருக்கிறது.
 4-
ஆவது முறையாக அரை இறுதிக்கு முன்னேறிய தென் ஆப்பிரிக்க அணி வழக்கம்போல கோட்டைவிட்டு, இந்த முறையும் சோகத்துடன் நாடு திரும்புகிறது.
 
இந்தியா-ஆஸ்திரேலியா
 
நாளை பலப்பரீட்சை
 
சிட்னியில் வியாழக்கிழமை நடைபெறும் மற்றோர் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி வருகிற 29-ஆம் தேதி மெல்போர்னில் நியூஸிலாந்துடன் இறுதி ஆட்டத்தில் விளையாடும்
.

No comments: