Friday 6 March 2015

விமான நிலையங்கள் ; ஒப்படைப்பது தனியாரிடமா?

நம் நாட்டின் விமானநிலையங்கள் நவீனப்படுத்தப்பட்டபின், தனியாரிடம் தாரை வார்ப்பதற்காக நடை பெற்றுக் கொண்டிருக்கும் கள்ளத் தனமான நடவடிக் கைகள் குறித்து இந்தஅவையின் கவனத் திற்குக் கொண்டுவருகிறேன்என மாநிலங்களவை யில் உரத்து முழங் கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் உறுப்பினர் தபன்சென்: சிஐடியு பொதுச் செயலாளரான அவர், அவையில் மேலும் பேசியதாவது:இந்தியாவில் உள்ள விமான நிலையங்களை நவீனப்படுத்து வதற்காக பொதுப் பணம் செலவிடப்பட்டபின்,இவ்வாறு தனியாரிடம் தாரை வார்க்கப்படுகிறது. கொல்கத்தா, சென்னை, அகமதாபாத், ஜெய்ப்பூர் விமான நிலையங்களைத் தனியாரிடம் ஒப்படைப் பதற்கான விளம்பரங்கள் வெளியாகி இருக்கின்றன. சென்ற ஆண்டு மாநிலங்களவையில் ஒரு கேள்விக்குப் பதிலளித்த சமயத்தில், கொல்கத்தா மற்றும் சென்னை விமான நிலையங்களுக்கு மட்டும் 3,700 கோடி ரூபாய் செலவில் நவீனமய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக அரசுத்தரப்பில் சொல்லப் பட்டது.அதேபோன்று, நாட்டிலுள்ள 20 விமான நிலையங்களை நவீனப் படுத்துவதற்கு சுமார் 27 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது. இவ்வாறு நாட்டின் விமான நிலையங்களை நவீனப்படுத்தியபின் அவற்றைத் தனியாரிடம் பெயரளவிலான வாடகை ஒன்றைப் பெற்றுக் கொண்டு ஒப்படைப்பதற்கு என்ன காரணம்? நாட்டின் நலன்களுக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் படவில்லை. கிட்டத்தட்ட இனாமாகவே தனியாரிடம் தாரை வார்க்கப்பட இருக்கிறது. பொதுப் ணத்தைச் சூறையாட எப்படி அனுமதிக்க முடியும்? அதற்கு நேர்மையாக என்ன காரணத்தை அரசாங்கத்தால் சொல்ல முடியும்?
இதற்குத் தெளிவான விளக்கத்தை அரசாங்கம் கூற வேண்டும். முன் பொரு முறையும் அரசாங்கம் இவ்வாறு முயற்சிகளை மேற்கொண்டது. இப்பிரச்சனை குறித்து இந்த அவையில் எழுப்பப்பட்டது. அப்போது அது அடங்கிவிட்டது. ஆனால், இப்போது மீண்டும் இந்தக் காரியம் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. முதலில் நான்கு விமான நிலையங்கள், பின்னர் 16 விமான நிலையங்கள். தனியாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். இது அனுமதிக்கப்படக்கூடாது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக விமான நிலைய ஆணைய ஊழியர்கள் போராட்டங்களைத் துவங்கி இருக்கிறார்கள்.அனைத்து விமான நிலையங்களிலும் வரும் மார்ச் 11 அன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட இருக்கிறார்கள். அரசாங்கம் உடனடியாக விமான நிலையங்களைத் தனியாருக்குத் தாரைவார்ப்பதற்காக மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும்.இவ்வாறு தபன் சென் கூறினார்.தபன்சென்னுக்கு ஆதரவாக உறுப்பினர்கள் ரித்தபிரதா பானர்ஜி, கே.என்.பாலகோபால், டி.கே.ரங்கராஜன், கே.பி. ராமலிங்கம் ஆகியோரும் குரல் எழுப்பினர்.
பத்தாண்டுகளுக்கு முன்,இந்தியாவில் உள்ள அனைத்துவிமான நிலையங்களையும் இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் கீழ் நவீனப்படுத்திட அரசாங்கத்திற்கு இந்த அவை அனுமதி அளித்தது.இப்போது எந்த அதிகார வரம்பின்கீழ் இந்தக் கொள்கை ரத்துசெய்யப்படுகிறது? என் தோழர் தபன்சென் கூறியது முற்றிலும் சரி. எந்த அதிகாரவரம்பின்கீழ் இந்தக் கொள்கை ரத்து செய்யப்படுகிறது? இதனை அனுமதிக்க முடியாது”-சீத்தாராம் யெச்சூரி.

No comments: