உலக பேட்மிண்டன் தரவரிசையில் மகளிர் பிரிவில் முதன் முறையாக முதலிடம் பிடித்து இந்திய நட்சத்திரம் சாய்னா நெவால் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.இந்திய வீராங்கனை ஒருவர் முதல் முறையாக தரவரிசையில் முதலிடம் பிடித்திருக்கும் வகையில் சாய்னா நெவால் சாதனை புரிந்துள்ளார்.புதுடெல்லியில் நடைபெறும் இந்தியன் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடரில் சனிக்கிழமையான இன்று ராட்சனாக் இண்டனான் என்பவர் கரோலினா மாரின் என்பவரை வீழ்த்தியதை அடுத்து சாய்னா நெவால் உலகின் நம்பர் 1 இடத்தைப் பிடித்தார்.இன்று ஜப்பான் வீராங்கனை யுயி ஹாஷிமோட்டோவுடன் சாய்னா நெவால் தனது 2-வது அரையிறுதியில் விளையாடுகிறார். ஆனால், இந்தப் போட்டிக்கு முன்பே உலகின் நம்பர் 1 இடத்தைப் பிடித்தார்சாய்னாநெவால். உலக பேட்மிண்டன் தரவரிசையில் பிரகாஷ் படுகோன் முதலிடம் பிடித்துள்ளார். ஆனால் மகளிர் பிரிவில் நம்பர் 1 இடத்தைப் பிடித்த இந்திய வீராங்கனை சாய்னா நெவால் மட்டுமே. நம்பர் 1 இடம் குறித்து சாய்னா நெவால் கூறும்போது, “எல்லா போட்டித் தொடர்களிலும் பங்கேற்று அனைத்திலும் வெற்றி பெறுவதில் கவனம் செலுத்துகிறேன். என்னைத் தோற்கடித்த வீராங்கனைகளை வெற்றி பெற விரும்புகிறேன். கடந்த 3 ஆண்டுகளாக தோல்வி அடைந்தது போல் தோல்வியடைய விரும்பவில்லை. நான் சீராக வெற்றி பெற விரும்புகிறேன், வெற்றிகள் குவியும் போது தரவரிசை என்னும் சாதனையும் பின் தொடர்வது இயற்கை. கடந்த 7 ஆண்டுகளாக முதல் 5 இடங்களில் என்னைத் தக்கவைப்பது மிகக் கடினமாக இருந்தது. நான் இதனை இன்னும் சில காலங்களுக்கு தக்கவைக்க நினைக்கிறேன். சிறந்த வீராங்கனையாக இருக்கவே விரும்புகிறேன். உலகின் முன்னணி வீராங்கனைகளை வீழ்த்த விரும்புகிறேன்” இவ்வாறு தனது நம்பர் 1 சாதனை குறித்து சாய்னா நெவால் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment