மார்ச் 12ம் - இதே
நாளில் மகாத்மா காந்தி
இந்திய விடுதலைப் போராட்டத்தில் முக்கிய இடம்
பெற்ற தண்டி யாத்திரையை
துவங்கினார். உப்பு சத்தியாகிரகம் அல்லது தண்டி
யாத்திரை (Salt March) என்பது
காலனிய இந்தியாவில் பிரிட்டிஷ்
அரசு இந்தியர்கள் மீது
விதித்த உப்பு வரியை
அறவழியில் எதிர்க்கும் திட்டமிட்ட
போராட்ட மாகும். 1930 ஜனவரி
30 ஆம் நாள் இந்திய
தேசிய காங்கிரசு அறிவித்த
“முழு விடுதலை” என்ற
விடுதலைப் பிரகடனத்திற்குப் பிறகு
ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து
அமைப்பு ரீதியாகச் செய்யப்பட்ட
முதல் போராட்ட இயக்க மாகும்.
மார்ச்சு 12, 1930 அன்று
காந்தி தனது சபர்மதி
ஆசிரமத்திலிருந்து 23 நாள்கள்
240 மைல் தூரத்திலுள்ள தண்டிக்கு
நடை பயணத்தை வழி
நடத்தினார், உப்பை உற்பத்தி
செய்வதற்கு ஆங்கிலேயர் விதித்த
தடையை மீறி மகாத்மா
காந்தியுடன் வழியெங்கிலும் பெருமளவு
மக்கள் இணைந்து கொண்டனர்
ஏப்ரல் 6, 1930 இல் காந்தி
தண்டியை அடைந்து உப்புச்
சட்டங்களை உடைத்தபோது, அது
பேரளவில் சட்ட மறுப்பு
இயக்கமாக உருவெடுத்து இலட்சக்கணக்கான இந்திய மக்களை
ஆங்கிலேய ஆட்சிக்கெதிராகப் போராடத்
தூண்டியது.
No comments:
Post a Comment