Tuesday, 2 December 2014

வங்கி ஊழியர்-அதிகாரிகள் இன்று 02.12.14 வேலைநிறுத்தம் ...

வங்கித்துறையில் நியாயமான ஊதிய உயர்வு மாற்றத்தை உடனே வழங்கக் கோரி 10 லட்சம் வங்கி ஊழியர்கள் டிசம்பர் 2 முதல் 5 வரை நாடெங்கிலும் மண்டல வாரியாக தொடர் வேலைநிறுத்தம் செய்ய விருக்கிறார்கள்தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, லட்சத்தீவு உள்ளிட்ட தென்மண்டலப் பகுதியின் அனைத்து வங்கிகளிலும் டிசம்பர் 2 (இன்று) வேலைநிறுத்தம் நடைபெறும். இதில் 3 லட்சம் ஊழியர்கள்-அதிகாரிகள் கலந்து கொள்வார்கள்.வட மண்டலம் டிசம்பர் 3; கிழக்கு மண்டலம் டிசம்பர் 4; மேற்கு மண்டலம் டிசம்பர் 5 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்தம் நடைபெறும்.9-வது இருதரப்பு ஒப்பந்தம் அக்டோபர் 2012 உடன் முடிவடைந்தது. 11 சதம் மட்டுமே ஊதிய உயர்வு என்பதில் இந்திய வங்கிகள் சங்கம் நிற்கிறது9 ஊழியர் சங்கங்கள், 4 அதிகாரிகள் சங்கங்கள் இணைந்த வங்கி ஊழியர் கூட்டமைப்பு 25 சத ஊதிய உயர்விலிருந்து 23 சதமாகக் குறைத்துக் கொள்ளத் தயாராக இருப்பினும் வங்கி நிர்வாகங்கள் நியாயமான உயர்வுக்கு வரத் தயாராக இல்லை.சென்னையில் ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதராபாத் முன்பாக திங்களன்று(டிச.1) மாலை 5.30 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வேலைநிறுத்த நாளான டிசம்பர் 2 அன்று, கடற்கரை ரயில் நிலையம் எதிரிலுள்ள சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காலை 10.30 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதனை வங்கி ஊழியர் கூட்டமைப்பின் உறுப்பு சங்கமான பெபியின்-தமிழ்நாடு பொதுச் செயலாளர் சி.பி.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

No comments: