Thursday, 4 December 2014

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அடிப்படை வசதி !

உலகப்புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருகை தரும் யாத்ரீகர்களுக்கு கோவிலில் அடிப்படை வசதிகள் செய்து தருவதுடன், வாகனங்கள் நிறுத்துவதற்கு பழைய சென்ட்ரல் மார்க்கெட் அருகே தங்கும்வசதி செய்து தரவேண்டும் என்றுமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மத்தியப்பகுதிக்குழு வலியுறுத்தி யுள்ளது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மத்தியப்பகுதிக்குழுக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் இரா.லெனின் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.நன்மாறன், பகுதிக்குழுச் செயலாளர் பி.ஜீவா மற்றும் பகுதிக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-ஒவ்வொரு நாளும்மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலாப்பயணிகள், யாத்ரீகர்கள் வருகின்றனர். ஆனால், இவர்களுக்கான அடிப்படை வசதி கோவிலில் இல்லை. இதனால் கோவிலைச் சுற்றிசிறுநீர், மலம் கழிக்கப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. உடனடியாக இவற்றை தடுத்து நிறுத்தவேண்டும். கூடுதலாக இப்பகுதியில் மதுரை மாநகராட்சி சார்பில் கழிப்பறை வசதி செய்து தர வேண்டும்.மதுரை மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றி நிலவும் நெருக்கடியை குறைக்கும் நோக்கத்துடன் அதன்அருகில் இருந்த சென்ட்ரல் மார்க்கெட் கடந்த 2010-ஆம் ஆண்டு மாட்டுத்தாவணிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. பழைய சென்ட்ரல் மார்க்கெட் அமைந்திருந்த இடத்தில் நவீன வடிவில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைக்க (இரண்டரை ஏக்கர்) ரூ. 5.63 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இங்கு ஒரே நேரத்தில் 800 வாகனங்கள் நிறுத்தும் வகையில் கட்டுமானப் பணிகள் தொடங்கின. இதே இடத்தில் சுற்றுலாப் பயணிகள் வளாகம் அனைத்து வசதிகளுடன் கட்ட திட்டமிடப்பட்டது. இதற்காக கையில் கிடைத்த நிதியை இரண்டு ஆண்டுகளாக பயன்படுத்தாமல் முடக்கி, 2013-ஆம் ஆண்டு மீண்டும் தில்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டது. அன்றாடம்வரும் வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலாப்பயணிகளின் வாகனங்கள் இங்கே நிறுத்தப்பட்டாலும் மழை, வெயிலுக்கு கூட அவர்கள் ஒதுங்க இடமில்லை. எனவே, உடனடியாக தங்குமிடம், குடிநீர், கழிப்பறை வசதி செய்துதரவேண்டும். 2.32 கோடிரூபாய் செலவில் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டு இடிக்கப்பட்டுக் கிடக்கும்குன்னத்தூர் சத்திரப்பணியை விரைவாக தொடங்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரை 81- வது வார்டு கோவிந்தன் செட்டி தெரு, 82- வது வார்டு தைக்கால் 1- வது தெரு, 83- வது வார்டுபூக்காரத்தெரு ஆகியவற்றில் கட்டப்பட்டு செயல்படாமல் பூட்டிக்கிடக்கும் சமுதாயக்கூடங்களை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரவேண்டும். 81- வது வார்டு ராஜாமில் ரோடு, கீழ அண்ணாத்தோப்பு, 83- வது வார்டுநாயக்கர் புதுத்தெரு,நேதாஜி ரோடு பகுதியில்முழுவதும் சேதமடைந்துள்ள சாலைகளைப் போர்க்கால அடிப்படையில் சரி செய்யவேண்டும்.இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

அவசியம் அடிப்படை வசதிகளைச் செய்த தர வேண்டும் ஐயா