Sunday, 22 September 2013

21.09.13 - மாவட்ட மாநாட்டு வரவேற்பு குழு அமைப்பு


திருப்புமுனை ஏற்படுத்தவிருக்கும் 

திண்டுக்கல் -  மதுரை மாவட்ட மாநாடு . . .

அருமைத் தோழர்களே! வணக்கம். 
நமது மதுரை மாவட்ட சங்கத்தின் மாநாடு எதிர்வரும் 2013 - நவம்பர் 8, 9 தேதிகளில் திண்டுக்கல் நகரில் சீரும் சிறப்புமாக நடைபெறவுள்ளது. இம்மாநாடு புதிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என்பதற்கு நல்ல முன்மாதிரியாக திண்டுக்கல்லில் 21.09.2013 மாலை நடைபெற்ற வரவேர்புகுழு கூட்டம் கட்டியம் கூறியது. 
எழுச்சியுடன் வரவேற்புகுழு அமைப்பு . . .
மதுரை மாவட்ட செயற்குழு முடிவின் அடிப்படையில் திண்டுக்கல்லில் மாவட்ட மாநாட்டை சக்தியாக நடத்துவது என்ற மாவட்ட சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று திண்டுக்கல் ரெவென்யூ மாவட்ட தோழர்கள் 21.09.2013ல்  நடைபெற்ற வரவேற்புகுழு அமைப்புக் கூட்டத்தில் மிகவும் எழுச்சியுடனும், உற்சாகத்துடனும் தனிநபர் நிதியளிப்பு அறிவித்த பெருமைகண்டு மாவட்ட சங்கம் மனதார, உளப்பூர்வமாக பாராட்டுகிறது. வாழ்த்துகிறது. 5 பெண்கள் உட்பட 80க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட கூட்டத்தில் மாவட்ட மாநாட்டின் சிறப்பம்சம், கடந்த கால பணி, கடக்க வேண்டிய தூரம், மாநாடு நடைபெறும் சூழல் அனைத்தையும் விளக்கியதோடு மாவட்ட மாநாட்டை சிறப்பாக நடத்திட அனைவரின் ஒத்துழைப்பு நல்க வேண்டுமென மாவட்ட செயலர் தோழர் எஸ்.சூரியன் வேண்டுகோள் விடுத்தார்.
1/2 மணி நேரத்தில் 1/2 லட்சம் நிதி . . .
 திண்டுக்கல்லில் நடைபெறவிருக்கும் மாவட்ட மாநாட்டில் திருப்புமுனை ஏற்படுத்துவோம் என்ற உறுதிமொழியோடு கலந்து கொண்ட தோழர்களில் அனேகம்பேர் ஒன்றின் பின் ஒருவராக தங்களது தனிநபர் நிதியை அறிவித்த வண்ணம் இருந்தார்கள்.  அதன் வெளிப்பாடு 1/2 மணி நேரத்தில் 1/2 லட்சத்தை தாண்டி ரூபாய் 53,500/- வரை சென்றது.  அடுத்தபடியாக போராட்ட விளக்ககூட்டம் நடத்த வேண்டி இருந்ததால் நிதி அறிவிப்பை வலுக்கட்டாயமாக நிறுத்தப்பட்டது. 
அதிர்ச்சியளித்த அன்பின் வெளிப்பாடு . . .
அத்தனையும் தாண்டி அன்புமிக்க சகோதரர், தோழர் பரிமளரெங்கராஜ்  மாவட்ட மாநாட்டின் முதல் நாள் பொது அரங்கு முடிந்து சார்பாளர்/பார்வையாளர்களுக்கு அளிக்கப்படும் அசைவ விருந்தை (மட்டன் பிரியாணி, கோழி சாப்ஸ், அவிச்ச முட்டை அதோடு பீரணி, தால்ச்சாவுடன்  வெங்காய பச்சடி) தனது சொந்த பொறுப்பாக சுமார் ரூபாய் 50,000/- செலவினை ஏற்க முன்வந்து மனமுவந்து அறிவித்தபோது அவையில் எழுந்த கரவோசை அடங்குவதற்குள்  . . . பணிஒய்வில் சென்றாலும் என்பணி சங்கம் ஒன்றே என்ற உயரிய நோக்கோடு தொடர்ந்து ஈடுபாட்டுடன் செயலாற்றிவரும் அருமைத் தோழர் A.தங்கபாண்டியன் மாநாட்டின் முதல் நாள்  இரவு சிற்றுண்டி விருந்து செலவினை (சுமார் ரூபாய் 25,000/-)  தனது தனிநபர் நிதியளிப்பாக அறிவித்தார்.  தோழர் கே. பழனிக்குமார் B/S -PLN இரண்டு நாட்கள் நடைபெறும் மாவட்ட மாநாட்டிற்கு சமையலுக்குத் தேவையான தேங்காய் முழுவதையும் தனது தனிநபர் பங்களிப்பாக அறிவித்தார். மேலும் தனிநபர் நிதியாக ரூபாய் 500 முதல் 5000 வரை அவையில் அறிவித்தவர்களின் பட்டியல் நீண்டதால் அனைவரின் பெயரையும் தற்போது வெளியிட இயலவில்லை. 
ஒப்புயர்வற்ற வரவேற்புக்குழு அமைப்பு . . .
திண்டுக்கல் பகுதியில் வாழும் பெருவாரியான மக்களால் அன்கீரிக்கப்பட்டு தொடர்ந்து 3 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு அனைவரும் பாராட்டும் வண்ணம் அனைத்து பிரச்சனைகளிலும் நேரடியாக களத்தில் இறங்கி மிகச்சிறப்பாக மக்கள் தொண்டாற்றிவரும் மரியாதைக்குரிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் MLA தோழர். K. பாலபாரதி அவர்களை தலைவராக கொண்ட முழுமையான வரவேற்புக்குழு அனைவரின் ஒருமித்த, பலத்த கரவோசை ஒப்புதலோடு ஏற்புக்குபின் வரவேற்புக்குழு அமைக்கப்பட்டது. (முழுமையான வரவேற்புக்குழு பட்டியல் பின்னர் வெளியிடப்படும்). 

1 comment:

Unknown said...

'தனி நபர் நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றன' என்ற அறிவிப்பை தொடர்ச்சியாக இணையத்தில் வெளியிடுங்கள்..